மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. உலக அளவில் சுமார் ரூ.620 கோடிக்கும் மேல் வசூலித்த ‘லியோ’ திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உள்ளது. ‘லியோ’ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் அதிரடி மாஸ் காட்சிகளால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.615 கோடிக்கு மேல் வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் காணக் கிடைக்கிறது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘பொன்னியின் செல்வன்’ பாகம் இரண்டு இந்த ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படியிருக்க லியோ திரைப்படத்தில் படப்பிடிப்பு hd புகைப்படங்கள் இணையத்தில் வெளியீடு…