சாய் பல்லவி, ஒரு கலைஞராக விஜய் டிவியில் முதலில் மக்களுக்கு அறிமுகம் ஆனார், ஆனால் இந்த நிகழ்ச்சி அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.அதன்பிறகு கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21வது படத்தில் நடித்து வருகிறார், படத்தின் Glimpse பார்க்க ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.குத்தாட்ட வீடியோ சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார்.

தமிழில் சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார், தனது காதலன் வினீத் என்பவரையும் ரசிகர்களுக்க அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது, இந்த விழாவில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.