தென்னிந்திய சினிமாவில் பிரபலங்கள் உள்பட மக்கள் மத்தியில் பலரையும் தனது பலத்த ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்ததை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தனது இயல்பான வாழ்க்கை, உதவும் மனப்பான்மை, எளிமை மற்றும் கார் ரேஸ், பைக் பந்தயம். துப்பாக்கி சுடுதல், த்ரோன் என பல துறைகளில் கலக்கி அதன் மூலம் பலரையும் வியக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின்

கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது எனலாம் இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான வெற்றியை பெற்று இருந்தது. இதையடுத்து தற்போது அதே கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார் அந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது மேலும் இந்த படம் முழுக்க ஆக்சன் கதைகளத்தை பின்னனியாக கொண்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க பிரபல இசையமைப்பளர் ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் நடித்துள்ளார் கடந்த சில வருடங்களாகவே பல மாறுபட்ட கதைகளம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமாகி வரும் மஞ்சு

வாரியார் இந்த படத்தின் மூலம் மேலும் தனது நடிப்பின் மூலம் பலரையும் வியக்க வைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படும் நிலையில் மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. அதன்படி இந்த படத்தில் நடிக்க சுமார் 1 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறபடுகிறது இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….