திரையுலகில் இன்றைக்கு படங்களில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கைவசம் பல படங்களை வைத்துகொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. கடந்த சில வருடங்களில் மட்டும் இவரது பிரபலம் எகிறிபோனதை அடுத்து அம்மினிக்கு பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் இருந்தது மட்டுமின்றி

சம்பளமும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் தாராளமாக குவிய தொடங்கியது. இந்நிலையில் இந்த நிலை சிறுது காலமே சென்ற நிலையில் அது அனைத்தும் வீணாகி போகும் அளவிற்கு சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனக்கு மையோசிடிஸ் எனும் ஆட்டோ இம்முன் நோய் தாக்கம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அதில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து அவர் அதில் இருந்து விரைவில் மீண்டு வந்து பழையபடி படங்களில் நடிப்பார் என பலரும் எண்ணிய நிலையில் நாளுக்குநாள்

அந்த நோயின் தாக்கம் அவருக்கு அதிகரிக்க அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதன் காரணமாக உடலளவில் மற்றும் மனதளவில் மிகுந்த வேதனைக்கு உள்ளான சமந்தா சமீபத்தில் கூட உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் இந்த நோயால் பெரிதளவில் பாதிக்கபட்டு உள்ள நிலையில் இதிலிருந்து மீண்டு வருவேனா என தெரியவில்லை என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதையடுத்து மேற்சிகிசைக்காக தென்கொரியா சென்று வந்த நிலையிலும் எந்த பலனும் இல்லாத நிலையில் இனி தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள உள்ள நிலையில் இனி படங்களில் நடிக்கபோவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனைதொடர்ந்து சமீபத்தில் கூட இவர் நடிப்பில்

வெளியாகவுள்ள சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூட மேடையிலேயே அழுது பலரையும் கண்கலங்க வைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் படுத்த படுக்கையான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் சோபா மீது படுத்து இருக்கும் நிலையில் அவரது வளர்ப்பு நாய் அவர் அருகில் சென்று அவரை தட்டி கொடுத்து இருக்கிறது. இதையடுத்து அதை புகைப்படம் எடுத்து டோன்ட் வொர்ரி மம்மி, ஐ காட் யுவர் பேக் என சொல்வது போல பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பபுகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)