தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது இதன் காரணமாக பல முன்னணி பிரபலங்களும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் அதிலும் கடந்த சில மாதங்களாக  இந்த நிலையில் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இப்படியொரு நிலையில் பிரபல முன்னணி நடிகையான சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி

நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் திடீரென தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தான் மருத்துவமனையில் இருப்பதாகவும் தனக்கு மையோசிடிஸ் எனும் மர்ம நோய் இருப்பதாகவும் அதற்காக தொடர் சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் அதில் பதிவிட்டு இருந்தார் . இதையடுத்து சமந்தாவின் நிலை தற்போது மிகுந்த மோசமாகி வரும் நிலையில் படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கியபடி சிகிச்சை எடுத்து

வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு பிரபல விஷால் பட  நடிகை ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி பலரையும் உறைய வைத்து உள்ளது. அது குறித்து விசாரிக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த சிவப்பதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பலரையும் தனது அழகால் கவர்ந்து இருந்தவர் பிரபல நடிகை மம்தா மோகன் . இவர் இந்த படத்தை தொடர்ந்து

தமிழில் ஒருசில படங்களிலேயே நடித்தபோதிலும் பிறமொழிகளில் அதிகளவில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்தா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் 38 வயதாகும் நிலையில் தனக்கு தோல் நிறமி இழத்தல் எனும் மர்ம நோய் இருப்பதாகவும் அதிலிருந்து மீள முடியுமா என தெரியாத நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)