பொதுவாக படங்களில் பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கும் உள்ளது எனலாம். மேலும் சொல்லப்போனால் பல படங்கள் கதைகளை தாண்டி காமெடி நடிகர்களுக்கு என்றே வெற்றிகரமாக ஓடியது எனலாம். இந்நிலையில் சின்னத்திரையில் பிரபல முன்னணி நகைச்சுவை நிகழ்ச்சியான லொள்ளு சபா

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை கவர்ந்ததை அடுத்து திரையுலகில் படங்களில் காமெடி நடிகராக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு ஹீரோ, காமெடியன், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்

 

நகைச்சுவை நாயகனாக நடித்து நிலையில் தனக்கென தனி பெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தார். இருப்பினும் காமெடியனாக நடிப்பதை தாண்டி ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு பல படங்களில் ஹீரோவாக நடித்தும் எதுவும் இவருக்கு போதிய வரவேற்பையும் பிரபலத்தையும் கொடுக்கவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முடிவு செய்து தற்போது பல முன்னணி

நடிகர்களின் படங்களில் வாய்ப்பு தேடி  வருகிறார். இப்படி இருக்கையில் சந்தானத்தின் சமீபத்திய புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த புகைபடத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போனதோடு எலும்பு தோலுமாக இருப்பதை பார்த்த பலரும் இவருக்கு என்ன ஆச்சு என்பது போலன பல கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்………