பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 21- போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் தற்போது நூறு நாட்களை கடந்த நிலையில் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்போது வீட்டில் பைனலில் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலையும் ஐம்பது லட்சம் பரிசுதொகையையும் யார் வெல்லபோகிறார்கள் என தெரியாத நிலையில் அசீம். கதிரவன், அமுதவாணன், மைனா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் போட்டிபோட்டு வருகின்றனர். இதற்கிடையில்

எவிக்சனில் வெளியே சென்ற அணைத்து போட்டியாளர்களும் மீண்டும் வீட்டுக்குள் வந்து அவரவர் பங்குக்கு கலகத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க வழக்கம் போல் இந்த சீசனிலும் இறுதி வாரத்திற்கு முன்னர் பணப்பெட்டி வைக்கபடும் இதையடுத்து அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு வெளியில் செல்லலாம். இதனைதொடர்ந்து மற்ற சீசன்களில் எல்லாம் அதன் மதிப்பு

அதிகமானதிற்கு பின்னரே போட்டியளர்கள் அதை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்கள் ஆனால் இந்த சீசனில் ஆரம்ப தொகையான 3 லட்சதையே போதும் என எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சக போட்டியாளர்கள் பலரும் உறைந்து போன நிலையில் கதிரவன் தீர்க்கமாக ஒரே முடிவாக பணமுட்டையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் கதிரவன் பிக்பாஸ் வீட்டில் நூறு நாட்கள் இருந்த நிலையில் அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்க கதிரவனுக்கு ஒரு நாளைக்கு 20ஆயிரம் பேசப்பட்டதை அடுத்து மொத்தம் நூறு நாளைக்கு சுமார் இருபது லட்சத்தை சம்பளமாகவும் பணமுட்டை தொகை மூன்று லட்சத்தையும் 23 லட்சத்துடன் வெளியேறி உள்ளார்……..