தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல இளம் நடிகர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி தங்களது நடிப்பு திறமையின் மூலம் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நடிப்பிற்கே ஒரு பல்கலைகழகமாக இருந்து பலநூறு படங்களில் மாறுபட்ட கதை கேரக்டர் என நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் நடிகர்

திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இந்நிலையில் இவர் முதன் முதலில் கடந்த 1952-ம் ஆண்டு வெளிவந்த பராசக்தி படத்தின் மூலமாக கதாநாயனாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பு மற்றும் தனது வசீகர தோற்றதால் பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். இதையடுத்து

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சிவாஜி அவர்கள் தனது இறுதிநாள் வரை படங்களில் நடித்து வந்தார் இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். அவர் என்னதான் மறைந்து இருந்தாலும் அவரது படங்களின் மூலம் இன்றளவும் பலரின் மனதில் நிலையாக வாழ்ந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சிவாஜி அவர்கள் கடந்த 1952-ம் ஆண்டே கமலா

என்பவரை திருமணம் செய்து கொண்டார் இதனைதொடர்ந்து இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர் இதில் மகனான பிரபல நடிகர் பிரபுவை நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில் சிவாஜி கணேசன் அவர்களின் மனைவி குறித்து அவ்வளவாக நமக்கு தெரியாத நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….