திரையுலகில் படங்களில் பல முன்னணி நடிகர் நடிகைகளுக்கும் நடன இயக்குனராக இருந்தது மட்டுமின்றி பல டான்ஸ் மாஸ்டர்களையும் உருவாக்கி பெருமை பிரபல முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டரையே சேரும். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி என பல மொழிப்படங்களில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார். இதையடுத்து

வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்ரையிலும் தனது கால் தடத்தை பதித்த கலா மாஸ்டர் மானாட மயிலாட நடன போட்டியை மையமாக ரியாலிட்டி நிகழ்ச்சியை துவங்கி நடுவராக பணரிபுரிந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து பல சீசங்களை கடந்து இருந்தது. இப்படி இருக்கையில் தொடர்ந்து படங்களில் நடன இயக்குனராக இருந்து வருவதோடு தனியாக நடன பள்ளி ஒன்றை வைத்து அதிலும் பலருக்கு நடனம் கற்றுகொடுத்து

வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கலா மாஸ்டர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து கடந்த 2004-ம்  ஆண்டு மகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு வித்யூ எனும் மகன்

ஒருவரும் உள்ளார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கலா மாஸ்டர் தனது மகன் வித்யூ பாட்டுபாடும் பல வீடியோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். இதையடுத்து அந்த வீடியோவில் அவரது மகனை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது திறமையை கண்டு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kala Kala (@kalamaster_official)