தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர் இருந்தும் இதில் ஒருசிலர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு சின்னதிரையில் பல முன்னணி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது

மட்டுமின்றி தனது அழகான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி இன்றளவும் பலரின் கனவு கன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவரது அக்காவும் பிரபல

நடிகையுமான அம்பிகாவும் இவரும் இணைந்து ஏஆர்எஸ் ஸ்டுடியோஸ் எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நிலையில் தற்போது அது பிரமாண்டமான உணவகமாக மாற்றப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் ராதா கடந்த 1991-ம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். இதில் மகள்கள் இருவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அவரது

மகன் குடும்ப தொழிலை கவனித்து வருகிறார். இந்நிலையில் ராதாவின் கேரளாவில் இருக்கும் பூர்விகமான வீடு குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்தா வீட்டின் தற்போதைய மதிப்பு மட்டும் பல கோடிகளை தாண்டும் நிலையில் அந்த வீட்டை இன்றும் சிறப்பாக பராமரித்து வருவதாக பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது…….