நம் வாழ்நாளில் நமக்கு மிகவும் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருப்பது உணவு முறை இப்படி இருக்கையில் இதை அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நேர்த்தியாக கடைபிடித்து ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் நாம் அதை அலட்சியமாக சரிவர கடைபிடிக்காத நிலையில் பலவிதமான உடல் உபாதைகள் மற்றும் நோயினால் தொடர்ந்து அவதிப்படும்.

இந்நிலையில் நாம் அன்றாடம் எழுந்தவுடன் சில உணவு வகைகளை மறந்து கூட சாப்பிட கூடாது அந்த வகையில் அதிக காரம் , மசாலா, கொழுப்பு மிகுந்த பொருட்களை காலையில் எடுத்துகொள்ளும் பட்சத்தில் நமது ஜீரண பாதையில் எரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும். அதற்கு பதிலாக ஊற வைத்த தானிய வகைகள் மற்றும் டிரை புருட்ஸ், நட்ஸ் போன்றவைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

அதேபோல் தினமும் காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவைகளை அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இதற்கு மாற்றுவழியாக சூடான நீர் மற்றும் அருகம்புல் சாறு போன்றவைகளை பருகலாம் . அதோடு காலையில் இனிப்பான தின்பண்டங்கள், புளிப்பு மிகுந்த பழங்கள்.,

பால் சம்பந்தம்பட்ட பொருட்களை காலை நேரங்களில் உட்கொள்ளாமல் இருப்பது நமது உடலில் தேவையற்ற உடல் உபாதைகள், உடல் பருமன், அல்சர், நெஞ்சு எரிச்சல் போன்ற பல தொந்தரவுகள் வராமல் தடுக்கும் ஆகையால் இது போன்ற உணவு பொருட்களை முடிந்தவரை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும். நாம் மறந்தும் இந்த உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நம் உடலுக்கு நாம் செய்யும் நல்ல ஒரு பலனாக இருக்கும்……..