தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் சொல்லப்போனால் இதன் மூலமாக பிரபலமான பலர்தான் தற்போது சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் எனலாம். இப்படியொரு நிலையில் பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி சேனலான ஜீ தமிழ் தொலைகாட்சியில்

ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன போட்டியை மையமாக வைத்து வெளியாகும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் மக்களில் பலரும் கலந்து கொண்டு தங்களது நடன திறமையின் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்து வருவதோடு பலத்த பிரபலத்தையும் பெற்று வருகின்றனர் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில்

போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் டான்சர் ரமேஷ் சோசியல் மீடியாவில் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவைகளில் தனது டான்ஸ் வீடியோவை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இவர் சமீபத்தில் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் நடித்து

வந்த நிலையில் அவர் தனது வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து காலமாகி உள்ளார். இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் குடிபழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது இரு மனைவிகளுடனும் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இப்படி இருக்கையில் இவர் இன்று இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…….