தென்னிந்தியா திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்கள் காலமாகி வரும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெருத்த துயரத்தில் ஆழ்த்தி வருகிறது மேலும் இந்த நிலையில் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி சினிமா பிரபலம் காலமாகியுள்ள தகவல் இணையத்தில் வெளியாகி

உள்ளது. அதன் படி சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல நடிகர்களுக்கு படங்களில் அதிகளவில் டப்பிங் பேசியவர்  பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரீனிவாச கிருஷ்ணமூர்த்தி. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான ஓகே ஒக்கடு எனும் படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை

தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்கும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பெரும்பாலும் இவர் தான் குரல் கொடுத்து வருகிறார். இதனைதொடர்ந்து ஷாருக்கான், மோகன்லால், ஜெயராம், மாதவன் என பல முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ள தொடர்ந்து  படங்களில் பிசியாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்றைய நாளில் சிகிச்சை பலனின்றி காலமானர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…….