தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் படங்களில் வில்லனாக நடித்த பல முன்னணி நடிகர்கள் தற்போது பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர் எனலாம் இருப்பினும் அவர்கள் இன்னமும் தங்களது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில்

தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் தலைவாசல் விஜய். இவர் முதன் முதலில் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் எனும் படத்தின் மூலமாக சினிமாவில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் பின்னர் அந்த படத்தின் தலைப்பே இவரது பெயரின் அடைமொழியாக மாறிப்போனது. இந்த படத்தின் இவரது நடிப்பு பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க

வைத்த நிலையில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையிலும் சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில்

அவரது மகள் ஜெயவீனா நீச்சல் வீராங்கனை ஆவர் இதையடுத்து பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதங்கங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கு தற்போது பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபாரஜிதிதுடன் திருமணம் நிச்சயிக்கபட்டு உள்ளது. இந்நிலையில் இந்தா தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…..