தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை அதிதி ராவ் இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து தமிழில் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த்துடன் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகா சமுத்திரம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர் இதனைதொடர்ந்து இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது

காதலாக மாறிப்போனதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் அதிதி கடந்த சில வருடங்களுக்கு முன்னரே பிரபல நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து சில காலமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2013-ம் ஆண்டு விவாகரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து இருவரும் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரது

முன்னாள் கணவர் பிரபல நடிகை நீனா குப்தாவின் மகளான இளம் நடிகை மசபா வை  கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவருக்கும் ஏற்கனவே முன்னணி பட தயாரிப்பாளர் ஆன மது மன்டேனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இருவருக்கும் இது இரண்டாவது

திருமணம் நிலையில் அதேபோல் ஏற்கனவே விவாகரத்து ஆன சித்தார்த்தை அதிதி காதலித்து வரும் நிலையில் அவர்களுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….