கடந்த சில மாதங்களாகவே தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி பிரபலங்களும் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா, குஷ்பூ என பலரும் பலவிதமான உடல்குறைபாடுகள் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருப்பதாக

வெளியாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நண்பன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தன் மூலமாக தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை இலியானா.

இவர் இந்த படத்திற்கு தமிழில் கேடி எனும் படத்தில் நடித்திருந்த போதும் இவருக்கு பலத்த பிரபலத்தை தேடி கொடுத்தது என்னமோ இந்த படம் தான். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில்; போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து

வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் மருத்துவமனையில் இருக்கும்படி உள்ள அந்தா புகைப்படத்தில் கையில் ட்ரிப்ஸ் இறங்கும்படி உள்ளதோடு அதில் தனக்கு மருத்துவர்களின் பரிந்துரை படி மூன்று ஐவி திரவம் மூலமாக சிகிச்சை நடந்து இருப்பதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….