பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது நடன திறமையின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல டிக்டாக் புகழ் டான்சர் ரமேஷ். இவர் முதலில் சோசியல் மீடியா தளமான டிக்டாக், ரீல்ஸ் போன்ற செயலிகளில் தனது

வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பட வாய்ப்புக்கள் வந்த நிலையில் சமீபத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து ரஜினி அவர்கள் நடிப்பில் வெளியாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த  சில தினங்களுக்கு முன்னர் தனது குடியிருப்பு பகுதியின் பத்தாவது

மாடியில் இருந்து குதித்து காலமாகிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இதனைதொடர்ந்து அவருக்கு பல முன்னணி திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தனர் இப்படி இருக்கையில் தற்போது இணையத்தில் அவர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதன்படி அந்த வீடியோவை அவரது முதல் மனைவி வெளியிட்டுள்ளார். அதில் ரமேஷ் தனது கையில் டேபிள் பேன் ஒன்றை வைத்து

கெஞ்சுவது போல் இருப்பதோடு மறுபக்கம் அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகள் இருவரும் சேர்ந்து அவரை காலமாக சொல்கிறார்கள். இதையடுத்து அவரது மகள் கயிறை எடுத்துகொடுத்து இது வேண்டுமா இல்லை கீழே குதிக்கிறாய் என கேட்கும் நிலையில் அவரது இரண்டவாது மனைவி கையில் கம்பியுடன் அமர்ந்துள்ளார். மேலும் தனது பிறந்தநாளையோட்டி முதல் மனைவியின் சென்று வந்த நிலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டு உள்ளதாக கூறபடுகிறது…….