பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் நிகழ்ச்சிகளும் எந்த அளவிற்கு பிரபலமோ அதைக்காட்டிலும் அதில் நடிக்கும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் தொகுப்பாளர்களாக பலரும் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக தனது சிறுவயது முதல் விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர்

பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் திதிப் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களே நீடித்த அவர்களது திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்தில் போய் முடிந்தது. அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வரும் டிடி

கடந்த சில மாதங்களாக பல வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருவதோடு அங்கு மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் மயக்கி வருகிறார். இந்நிலையில் டிடி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த உள்ளது. இதையடுத்து

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரது அக்காவும் பிரபல தொகுப்பாளினியுமான பிரியதர்ஷினி கூறுகையில், நாங்களுன் அவளிடம் அந்த தொழிலதிபர் யார் என கேட்டோம் அதற்கு அவள் அது தான் யாருன்னு தெரியவில்லை என கூறினால் அதனால் நாங்கள் இதுபோன்ற வதந்திகளுக்கு ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை. மேலும் அவள் அவளுடைய வாழ்க்கை மற்றும் வேலையில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள் என கூறினார்…….