தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் வகையில் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகாவும் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில்

ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து வீட்டிலேயே முடங்கி கிடந்த அம்மிணி அடுத்த கட்ட முடிவாக திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் தனது தொழில் பார்டனருமான சொஹைல் கதுரியா என்பவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிக பிரமாண்டமான அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். மேலும்

இவர்களது திருமண வீடியோவை ஹாட்ஸ்டார் குழுமம் வெளியிடும் உரிமையை வாங்கி இருந்த நிலையில் தற்போது அவர்களின் திருமண வீடியோவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரபல நடிகையான ஹன்சிகா தனது தோழியின் கணவரையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள காரணம் என்ன என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக

வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. அதில் யூ டோல்ட் மீ டோன்ட் லுக் அட் எனிஒன் பாஸ்ட் என ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசுவது போல் அந்த வீடியோ உள்ளது. இதையடுத்து முந்தைய காலத்தை பற்றி கவலையில்லை என்பதால் தான் ஹன்சிகா இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)