சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ,முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பிரமாண்டமாக முடிவடைந்தது மேலும் இந்த சீசனில் பல மாறுதல்கள் இருந்த நிலையில் இதன் இறுதிகட்ட போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர்

இருந்த நிலையில் அசீம் டைட்டிலை தட்டி சென்றார் இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தார்கள். இதில் திருநங்கையான ஷிவின் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே தனது திறமையான செயல்பாடுகளின் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார் எனலாம். இதனைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து

வெளியேறிய பிறகு இவருக்கு திரையுலகில் பல வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது சின்னத்திரையில் பிரபல முன்னணி தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் ஷிவின் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் பிரபல முன்னணி தொடரான பாரதி கண்ணம்மா

தொடரின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடிக்க இருப்பதாக அதில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த தொடர் பல திருப்பங்களுடன் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தொடர் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. இந்நிலையில் அதன் இறுதிகட்ட சீனில் ஷிவின் நடிக்க உள்ளார் எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது…….