தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல வருடங்களாக மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களாக தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தளபதி விஜய் அவர்கள் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகள்

மற்றும் மகள் உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு திருமணமாகி ஏறக்குறைய 24 வருடங்களுக்கு மேலாகும் நிலையில் இவர்கள் இருவரும் பிறிய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைதொடர்ந்து இவர்களது இந்த முடிவுக்கு முக்கிய காரணமே பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தான் என பல தகவல்கள் வெளியாகும்

நிலையில் அவருக்கு விரைவில் அவரது நீண்ட நாள் காதலருடன் திருமணம் நடக்க இருப்பதாக அவரது அம்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து சங்கீதா அவர்களும் தளபதி விஜயை பிரிந்து எங்கேயும் செல்லவில்லை அவர் தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில் தான் உள்ளார். அதேபோல் வெளிநாட்டில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு எல்லாம் போகவில்லை என மூத்த பத்திரிக்கை நிருபர் இணையத்தில் கூறியுள்ளார்……