தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து பலரும் திருமணம் செய்து வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் காஜல் அகர்வால், நயன்தாரா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளா இருப்பதாக தகவல்கள்

இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் . இப்படி ஒரு

நிலையில் சமீபத்தில் கல்யாண கோலத்தில் இவர் நடத்திய போடோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் இவருக்கு திருமணம் என பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இது வெறும் போடோஷூட் மட்டும் தான் என பதில் கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……..