கடந்த சில வருடங்களாக திரையுலகில் தொடர்ந்து பல பிரமாண்டமான படங்கள் வெளியாகி மக்களை வியப்புக்கு உள்ளாகி வருகிறது அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்து

யாரை வைத்து படம் இயக்க போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தளபதி விஜய் அவர்களை வைத்து ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதே கூட்டணியில் தளபதி 67 படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் எனும் ஆர்வம் மக்கள்

மத்தியில் மிகுதியாக உள்ள நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அப்டேட் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது. இதனைதொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்க போகிறார்கள் என தெரியாமல் இருந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல முன்னணி பாலிவுட்

நடிகரான சஞ்சய் தத் கமிட்டாகியுள்ளார். அதேபோல் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடிக்க உள்ளார்கள் அந்த வகையில், த்ரிஷா, மிஸ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யு தாமஸ், என பலரும் நடிக்க உள்ளார்கள். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………