தற்போது உள்ள நிலையில் திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே

போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல நெகடிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகி அதன் மூலம் வெகு பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல பிக்பாஸ் சர்ச்சை நாயகி ஜூலி. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து இணையத்தின் ட்ரோல் செய்யபட்டு வந்த நிலையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வந்தார் . இதையடுத்து தன் மீது விழுந்த விமர்சனங்களை போக்கும் வகையில் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக மீண்டும்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜூலி திருமணம் செய்து

கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்தா வண்ணம் உள்ளது. இது குறித்து கேட்கையில் ஜூலி ஏற்கனவே பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக எந்தவொரு தொலைகாட்சி மற்றும் படங்களிலும் பார்க்க முடியாமல் இருக்கும் நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டிருக்க கூடும் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…..