பொதுவாக திரையுலகில் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவர்கள் குறித்த சிறு தகவல்கள் வெளியானாலும் அது சோசியல் மீடியாவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடும். இந்நிலையில் தற்போது படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியா மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் தான் அதிகம் எனலாம் மேலும் சொல்லபோனால் இதன் மூலம் பிரபலமான பலர் தான் தற்போது சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில்

இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் கூல் சுரேஷ். இப்படி இருக்கையில் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை தேடி கொடுத்தது என்னமோ இணையத்தின் மூலமாகத்தான் எனலாம். அந்த வகையில் தொடர்ந்து வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் படங்களை முதல் காட்சியே பார்த்துவிட்டு திரையரங்கிலேயே இவர்

கொடுக்கும் வித்தியாசமான விமர்சனங்கள் மக்கள் இணையத்தில் வேற லெவலில் வைரளாகி வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் கூல் சுரேஷ் பிரபல இளம் நடிகை ஒருவருக்கு தியேட்டர் வாசலில் ரிவ்யூ கொடுத்து கொண்டிருக்கும் போதே கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ்  பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது பிரபல இயக்குனர் எஸ் ஏ  சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படத்தில்

கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை சாக்ஷி அகர்வாலுடன் பார்த்த கூல் சுரேஷ் வெளியே வந்த மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் போது பலமுறை சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இருந்தும் இதை சற்றும் எதிர்பார்க்காத சாக்ஷி எதுவும் சொல்லாமல் சிரித்தபடி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………