பொதுவாக சினிமாவில் படங்களை பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதேபோல் அந்த படங்களில் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கும் உள்ளது எனலாம். மேலும் சொல்லப்போனால் பல படங்கள் கதையை காமெடி நடிகர்களின் நகைச்சுவைக்காக மட்டுமே ஓடியுள்ளது எனலாம். இப்படி இருக்கையில் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளனமான புதுமுக காமெடி நடிகர்கள் உருவாகி தங்களது நகைச்சுவையின்

மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரையின் மூலமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். துவக்கத்தில் லொள்ளு சபாவில் தனது நகைச்சுவையான பேச்சால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் இவருக்கு பட

வாய்ப்புகள் வார தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவாக நடிக்க எண்ணி பல படங்களில் ஹீரோவாக நடித்த போதும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து தற்போது மீண்டும்

காமெடியனாக நடிக்க முடிவெடுத்த நிலையில் சுந்தர்சியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது குடும்ப குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து சந்தானம் அவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களது திருமண புகைபடம் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது………