பொதுவாக சினிமாவில் படங்களில் நடிக்கும் பிரபலங்கள் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்கின்றனர் இதன் காரணமாக அவர்கள் குறித்த எந்த ஒரு சிறு தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது அவரது ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது பிரபலங்கள் பலரும் தாங்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பலவிதமான மாறுபட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து வந்து வியப்பை அளித்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தனது திரைபயணத்தை ரேடியோவில் ஆர்ஜெவாக தொடங்கி இன்றைக்கு  திரையுலகில் பல படங்களில் ஹீரோவாக நடித்து

வருவதோடு இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வரும் நிலையில்   கடந்த சில வருடங்களாக  மூக்குத்தி அம்மன்,தீய வேலைசெய்யனும் குமாரு,வடகறி,வீட்ல விசேஷம், போன்ற திரைப்படங்களில் துணை நடிகராகவும்,கதானாயகவும்,காமடி நடிகராகவும்,தனது திறமையை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த  வெளியான ரன் பேபி ரன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக இருந்து வரும் நிலையில்  அப்பொழுது அவர்

ஒரு கருப்பு நிற சட்டையை அணிந்திருந்தார். மேலும் அவரைபோலேவே பிரபல முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ்குமார் அவர்களும் அதே சட்டையை அணிந்து இருந்தார் . இதையடுத்து ஜீவி அவர்கள் சமீபத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அப்பொழுது அவர் அணிதிருந்த சட்டையும், ஆர்.ஜே.பாலாஜி அணிந்திருந்த

சட்டையும் ஒரே மாதிரியாக இருந்த நிலையில் அந்த சட்டையின் விலை மற்றும் பிராண்ட் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இதையடுத்து  அந்த  சட்டை லூயிஸ் வியூட்டன் என்கிற பிராண்ட் எனவும் அதன் தற்போதைய விலை ரூ.1 லட்சம் ஆகும் எனவும் கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……..