தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த நிலை அதிகரித்து வரும் நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, கியரா அத்வானி போன்ற பல முன்னணி பிரபலங்களும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலத்திற்கு விரைவில் திருமணம் நடக்க

உள்ளதாகவும் அதற்கான நிச்சயதார்த்தம் சத்தமில்லாமல் நடந்து முடிந்து விட்டதாகவும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் பிரபல முன்னணி நடிகரான பிரபாஸ் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவர் பாகுபலி படத்தில் நடிக்கும்போதே அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த பிரபல முன்னணி நடிகை அனுஷ்காவிற்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இந்நிலையில் இது

குறித்து பேசிய இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே எங்கள் இருவருக்கும் இடையில் வேறு எந்த பழக்கமும் இல்லை என திட்டவட்டமாக கூறியிருந்தனர். இதனையடுத்து பிரபாஷிடம் தொடர்ந்து கல்யாணம் குறித்து கேட்டு வந்த நிலையில் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் அவரது நெருங்கிய உறவினர்கள் கருத்து தெரிவித்து

இருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது பிரபாஷ் அவர்களுக்கு நிச்சயம் முடிந்து விட்டதாகவும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பல தகல்வல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் மறுப்பும் பிரபாஸ் தரப்பிடம் இருந்து வராததை அடுத்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…….