தமிழ் சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் படங்களில் அறிமுகமாகி தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் பலரும் என்னதான் இன்றைக்கு சினிமாவை விட்டு காணாமல் போயிருந்தாலும் அவர்கள் இன்றளவும் தங்களது நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனதில் கனவு

கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் ஹீரோவாக நடித்த பல படங்களில் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக. இந்த படத்தில் தளபதி விஜயின் ஜோடியாக நடித்து பலரது மனதை தனது நடிப்பு மற்றும் அழகால் வெகுவாக கவர்ந்தவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சு அரவிந்த். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அதிகளவு மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தமிழில் எனக்கொரு மகன்

பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ்மோர், வானத்தைப்போல போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த போதும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடங்களே இருவரும் சந்தோசமாக வாழ்ந்த நிலையில்

இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அன்வித வினயன் எனும் மகள் ஒருவர் உள்ளார் இந்நிலையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……..