தமிழ் சினிமாவில் தற்போது பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது அதேபோல் பல புதுமுக இளம் இயக்குனர்களும் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி பல நல்ல கதைகளை கொண்ட படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகின்றனர் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த

திரைப்படம் இரும்புத்திரை . இந்த படம் முழுக்க அறிவியல் வழியாக நடக்கும் மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருந்தது இதையடுத்து இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து இந்த படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனர் பிஎஸ்  மித்ரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கியிருந்தார் இந்த படம்

எதிர்பார்த்த அளவு வெற்றியடையாத நிலையிலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது இயக்கத்தில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி வேற லெவலில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து மித்ரன் தனது அடுத்த படத்தில் ஹீரோவாக பிரபல கேஜிஎப் ஹீரோ

யாஷை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் பிஎஸ் மித்ரனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இவருக்கு கடந்த ஆண்டே ஆஷாமீரா ஐயப்பன் என்பவருடன் நிச்சயம் முடிந்த நிலையில் தற்போது இருவருக்கும் ரிசப்சன் நடந்து முடிந்துள்ளது இந்நிலையில் ரிசப்னில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…….