தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னதிரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சியில்

பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை மக்கள் மற்றும்  திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் முக்கிய நட்சத்திரங்களாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது இயல்பான குணத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் பிரபல

முன்னணி பிக்பாஸ் பிரபலம் தாமரைச்செல்வி. மேடை நாடக கலைஞரான இவர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேடை நாடகங்களில் நடித்தும் நடனமாடியும் பலரையும் கவர்ந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலத்த பிரபலத்தை பெற்றார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் இறுதி வரை வந்த நிலையில் தற்போது பிரபல முன்னணி தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து

வருகிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டை காட்டி இருப்பதோடு தனது மொத்த குடும்பத்தையும் காட்டியுள்ளார். இப்படி இருக்கையில் இந்த பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருவதோடு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…….