தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் வேற

லெவலில் ஹிட்டாகி வருவதோடு அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை மறைந்த பிரபல முன்னணி சீரியல் நடிகை சித்ரா தான் அது.

திரையுலகில் தனது பயணத்தை விஜேவாக தொடங்கிய இவர் தனது துடிப்பான பேச்சாலும் வசீகரமான தோற்றத்தாலும் பலரையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து பல முன்னணி தொடர்களில் நடித்து வந்தார். அதிலும் பிரபல முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் . இவ்வாறு தொடர்ந்து பல தொடர்கள்

மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காலமானார் . இப்படி இருக்கையில் இன்னும் சில தினங்களில் இவரது பிறந்தநாள் வார இருக்கும் நிலையில் இவரது குழந்தை பருவ புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு அதை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்……..