இப்போதைய காலகட்டத்தில்  தமிழ் சினிமாவில் அதிகளவில் பிறமொழி நடிகர்கள் படங்களில் அறிமுகமாகி நடித்து வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் விக்ரம். இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி திரை

பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இதில் கமலின் மகனாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி மலையாள நடிகர் மம்மூட்டி அவர்களின் மகனும் இளம் நடிகருமான காளிதாஸ். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள போதும் தமிழில் பாவ கதைகள் , மீன் குழம்பும் மண் பானையும், ஒரு பக்க கதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தற்போது கைவசம் பல படங்களில்

நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் காளிதாஸ் காதலர் தினமான இன்று தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு காளிதாஸ் இளம் பெண் ஒருவருடன் ஒன்றாக சுற்றி வருவதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக

இருக்கும் பல புகைபடங்களும் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில் அந்த பெண் யாரேன தற்போது வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் காளிதாஸ் மாடலிங் பிரிவில் பிரபலமாக இருக்கும் தாரிணி என்பவரை காதலித்து வருவதாக கூறியுள்ளார் மேலும் இவர் கடந்த 2021ம் ஆண்டு மிஸ் இந்திய யுனிவர்ஸ் மூன்றாவது ரன்னர் ஆப்பாக இருந்துள்ளார். இதையடுத்து தாரிணி தனது இணைய பக்கத்தில் இன்றைக்கு காளிதாஷை ரொம்ப மிஸ் செய்வதாக கூறியுள்ளார்………