திரையுலகில் ஒரு காலத்தில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகள் ஒரு கட்டடத்துக்கு மேல் அவ்வளவாக படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது இரூக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றன்ர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இதயத்திருடன் . இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி

கொண்டதோடு பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை காம்னா. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையிலும் தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சூரஜ் நாக்பால் எனும் பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த  நிலையில் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில்

ஆர்வம் காட்டி வந்தார். இருப்பினும் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுத்த காம்னா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருடா எனும் கன்னட படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பின்பு முழுவதும் சினிமாவுக்கு முழுக்குபோட்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வரும் காம்னாவின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..