தற்போது திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார். இதையடுத்து இவரது படங்கள் எப்போதும் திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காதல் மன்னன் . மேலும் சொல்லப்போனால் அஜித் அவர்களின் திரையுலக வாழ்க்கையில்

திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று இது எனலாம். இப்படி இருக்கையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து தனது வசீகரமான அழகால் பலரையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பல இலாசுகளின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் திலோத்தமா. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவரது உண்மையான பெயர் மானு மேலும் தனது சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட பல மேடை நிகழ்ச்சிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் ஒருமுறை மறைந்த

முன்னணி நடிகர் விவேக் அவர்கள் இவரது நடனத்தை பார்த்து பிடித்துபோக தனது நண்பரும் பிரபல இயக்குனருமான சரண் அவர்களிடம் கூறிய நிலையில் அதன் மூலமாக தான் காதல் மன்னன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதுமட்டுமின்றி மானு நடித்த முதல் மற்றும் கடைசி படம் இதுவே ஆகும் அதோடு பதினாறு வயதிலேயே ஹீரோயினாக நடித்த போதிலும் அதன் பின்பு படங்களில் நடிக்காத நிலையில் பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சந்திப் துரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் கடந்த

2011-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்த போது அவரை உடனிருந்து மானு தான் பார்த்து கொண்டார். அதன்பின்பு ரஜினியின் வற்புறுத்தலின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் ஹீரோயினாக என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்திருந்தார் . இவ்வாறு இருக்கையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதை பார்த்த அவரது ரசிகர்கள் என்னங்க நம்ம திலோத்தமாவா இது இப்படி ஆயிட்டங்கா என வாயடைத்து போயுள்ளனர்……..