தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பலத்த பிரபலத்தை பெற்று வருவது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர

காற்றுகென்ன வேலி. காலேஜ் கதையை மையமாக நகர்ந்து இந்த தொடர் இல்லத்தரசிகளை தாண்டி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நடிக்கும் பிரபல முன்னணி சீரியல் நடிகர் ஒருவர் நேற்றைய தினத்தில் தனது வீட்டிலேயே மர்மமான முறையில் காலமாகி இருந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர்

மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் காற்றுகென்ன வேலி தொடரில் கதையின் நாயகியாக நடிக்கும் நடிகையின் காலேஜ் நட்பு வட்டாரத்தில் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகர் ஹரி . இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடரில் இவர்களது நட்பு வட்டாரங்கள் குறித்த காட்சிகள் அவ்வளவாக வராமல் இருந்த

நிலையில் ஹரி எதிர்பாரதவிதமாக நேற்று தனது வீட்டில் காலமாகி உள்ளார் மேலும் இவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என தெரியாத நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இவர் காலமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது …….