தற்போது திரையுலகில் அனைவரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி நடிகர் மயில்சாமி அவர்கள் காலமான நிகழ்வு தான் . இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல மாறுபட்ட காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர்

பட்டாளத்தையே வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பல இளம் நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக நடித்து வந்தார் . இப்படி இருக்கையில் பலத்த சிவபக்தனான மயில்சாமி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவராத்திரியை முன்னிட்டு பிரபல கோயில் ஒன்றில் பல பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தோடு பல சினிமா பிரபலங்களையும் அழைத்து பல நிகழ்ச்சிகளுக்கும்

ஏற்பாடு செய்து இருந்தார் . இந்நிலையில் அந்த நிகழ்வில் ட்ரம்ஸ் மணி அவர்களும் கலந்து கொண்டு இருந்தார் இந்நிலையில் அதிகாலை மூன்று மணி வரை கோவிலில் இருந்த மயில்சாமி திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் அவரை உடனே அருகில் இருந்த ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் மீளாத துயரத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் மயில்சாமி அவர்களின் மகன் மற்றும் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் மயில்சாமி அவர்களுக்கு திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் கோலாகலமாக முறையில் திருமணம் நடந்து முடிந்தது………