தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வருவதோடு தென்னிந்திய அளவில் மக்கள் மட்டுமின்றி திரயுயலக பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னனி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்நிலையில் ஏறக்குறைய அறுபது வயதை கடந்த நிலையில் இன்னமும் படங்களில் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மாஸ் காட்சிகளில் நடித்து வருகிறார் . இவ்வாறான நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அண்ணாத்தா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற

நிலையில் தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் வேலைகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்து ரஜினி அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அதோடு ரஜினி அவர்களின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக பல

படங்களில் நடித்து வரும் நிலையில் ரஜினி அவர்கள் நேற்று அவசரமாக பெங்களூருவிற்கு தயாராகி சென்றுள்ளார் இதையடுத்து அவர் செல்லும் பல புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஜினி அவர்கள் தனது உடன்பிறந்த அண்ணனான சத்யநாராயணன் அவர்களின் 80-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர்

வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்துக்களை கூறியதோடு அங்கு நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும்படியாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் அவரது அண்ணனை பார்த்த பலரும் அட இவரா சூப்பர் ஸ்டாரோட அண்ணன் என வாயடைத்து போயுள்ளனர்………