பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதேபோல் அந்த படங்களில் அவர்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் உள்ளது எனலாம். அந்த வகையில் ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி பிரபலத்தை

ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகர் மைம் கோபி. இவர் படங்களில் நடிப்பதை தாண்டி மைம் எனப்படும் கலையில் சிறந்து விளங்கி வரும் இதை பலரும் கற்றுகொடுத்து வருவதோடு பல நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் . இப்படி இருக்கையில் கடந்த வார எபிசோடில்

கலந்துகொண்ட இவர் தனது மனைவி மற்றும் காதல் குறித்த பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் . அந்த வகையில் அவரது மனைவி டாக்டர் அதிலும் உயர் படிப்பான எம்டி கம்முனிட்டி மெடிசின் எனும் படிப்பை அமரிக்காவில்  படித்துள்ளார். இப்படி இருக்கையில் நான் அப்போது அதிகளவில் என்ஜியோ பணிகளை செய்து வந்த நிலையில் அதைபார்த்து பிடித்துபோக என்னை காதலித்தார் . இருப்பினும் எங்கள்

காதலுக்கு இருவீட்டார் மத்தியிலும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நாங்கள் இருவரும் ஐந்து வருடம் காத்திருந்து தான் திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில் அவரது மைம் கோபி தனது மனைவி குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……..