தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தற்போது உலக சினிமா அளவிற்கு தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு [பல ஹாலிவுட் படங்களில் நடித்து திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் அதிகளவில் படங்கள் வெளியாகி வருவதோடு

அணைத்து படங்களும் வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்ன்ர வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் சர் எனும் பெயரில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் அவர்கள் கடந்த சில வருடங்களாக சென்னையில் போயஸ்

கார்டனில் மிக பிரமாண்டமாக கட்டி வந்த வீட்டின் வேலைகள் முடிந்த நிலையில் அந்த புதுவீட்டின் கிரகபிரவேசத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் நடத்தியுள்ளார் . மேலும் தனுஷின் கனவு வீடான இந்த வீட்டை வேற லெவலில் பிரமாண்டமாக கட்டி முடித்துள்ள நிலையில் இதன் கிரகபிரவேசத்தையும் அதைவிட பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

இதனைதொடார்ந்து இதற்காக மட்டும் பல கோடிகளை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனது புதுவீட்டில் அப்பா அம்மாவுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……..