தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஷால் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வெளியான அணைத்து படங்களும் தோல்வியை நழுவி வந்த நிலையில் சமீபத்தில் விஷால் அவர்கள் லத்தி படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்திருந்தார் . இந்த படம் திரையங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையில் விஷால் அடுத்ததாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்

மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் . இதையடுத்து இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடித்து வருகிறார் இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதனைதொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு வேலைகள்

மும்முரமாக நடந்து வரும் நிலையில் நேற்று சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் எதிர்பாரதவிதமாக திடீரேனே தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில்

யாருக்கும் பெரிதாக எந்த காயங்களும் ஏற்படவில்லை என படக்குழு தெரிவித்துள்ளனர் . இவ்வாறு இருக்கையில் அந்த தீ விபத்தில் சில வாகனங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமே பெருத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு வழக்கம் போல தொடரும் என மார்க் ஆண்டனி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் ………..