சின்னத்திரையில் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அதில் நடிக்கும் நடிகர்களும் தங்களை மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து திரையுலகில்  முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள் . அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில்

ஒருவராக கலந்து தனது நகைச்சுவை மற்றும் தெளிவான தமிழ் பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தவர் விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அதே சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இதனைதொடர்ந்து சிறந்த பேச்சாளரான இவர் பல கல்லூரி மற்றும் மேடை  நிகழ்ச்சிகளில் கலந்து

கொண்டு பலவிதமான சொற்பொழிவுகளை கொடுத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்து வரும் நிலையில் ஈரோடு மகேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஈரோடு மகேஷ் அடிக்கடி சில கருத்துகளையும் பதிவுகளையும் தொடர்ந்து பதிவிட்டு

வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் தனது மனைவியுடன் காதலர் தின ஸ்பெஷலாக வேற லெவலில் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போடோஷூட் நடத்தி அதை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவங்கதான் ஈரோடு மகேஷோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……