சமீபத்தில் மக்களுக்கு பெரிதளவில் பொழுதுபோக்காக இருந்து வருவது என பார்த்தால் திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமாகதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவி மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது எனலாம் அந்த வகையில் இந்த சேனலில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த சேனலில்

கடந்த மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி குக் வித் கோமாளி . சமையல் போட்டியை மையமாக வைத்து நடக்கும் இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான் எனலாம் . இப்படி இருக்கையில் இந்த சீசன் தொடங்கி ஏறக்குறைய நான்கு வாரங்கள் ஆகும் நிலையில்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எளிமிநேசன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறி இருந்தார். இந்நிலையில் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என தெரியாமல் பலரும் ஆவலுடன் எதிபார்த்து இருக்கும் நிலையில் இந்த வாரம் எளிமிநேசன் சுற்றில் விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் இருந்த நிலையில் இதில் மைம் கோபி இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து

வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த வாரம் தான் மைம் கோபி தனது காதல் கதை திருமணம் என பேசி பலரது மனதையும் கவர்ந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறி இருப்பது பலருக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது ………