தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து தங்களது வசீகரமான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கவர்ந்து கனவு கன்னியாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது இளம் நடிகைகள் அதிகளவில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் முன்னணி நடிகைகள் பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல்

போய்விட்டனர் எனலாம். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கடலோர கவிதைகள் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரேகா. தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு

பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வராததை அடுத்து அம்மா, குணசித்திரம் என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் இறுதியாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார் இதையடுத்து தற்போது பல முன்னணி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியக்களை பதிவிட்டு

வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ஹோம் டூர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் தனது சகோதரியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ள அவர் அந்த வீட்டின் தோற்றத்தை பார்த்து வியந்து போனதை அடுத்து அந்த வீட்டை முழுவதுமாக சுற்றி காட்டி வீடியோ போட்டுள்ளார் . இந்நிலையில் அந்த வீட்டில் பாத்ரூம் காட்டிய அதிலேயே தங்கி குடும்பம் நடத்தலாம் போல என்பது போல திகைத்து பேசியுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………