பொதுவாக திரையுலகில் தற்போது ஏராளமான புதுமுக இயக்குனர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல திருப்பங்களை கொண்ட படங்களை இயக்கி அதன் மூலமாக தங்களை திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் . இவரது படங்கள்

எப்போதும் வெறுமனே காதல் , சண்டை என கமர்சியலாக இல்லாமல் ஒவ்வொரு படத்தையும் மெனக்கெட்டு அந்த படத்தின் கதையின் உண்மை தன்மையை நம்மை உணர வைப்பதோடு அதோடு நம்மை பயணிக்க வைத்திருப்பவர். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்றளவும் பலரது மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பொல்லாதவன் , ஆடுகளம் , விசாரணை, வடசென்னை, அசுரன் என சொல்லிக்கொண்டே போகலாம் . இப்படி இருக்கையில் வெற்றிமாறன் தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் விரைவில் திரையில்

வெளியகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெற்றிமாறன் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து வெற்றிமாறன் தனது அம்மா மற்றும் அக்காவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் என்னது இவங்கதான் இவரோட அக்காவா என வாயடைத்து போயுள்ளனர்……….