கடந்த சில மாதங்களுக்கு  முன்னர் பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றதோடு திரையுலகில் பலத்த வசூல் சாதனையையும் படைத்து இருந்தது . இதையடுத்து இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் வெகுவாக பல இளசுகளின்

மனதை வெகுவாக கவர்ந்து மக்கள் இடையே பலத்த பிரபலத்தை பெற்றதோடு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை இவானா . இவர் இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த படம் தான் மேலும் இந்த படம் தமிழில் மாபெரும் ஹிட்டானதை அடுத்து இந்த படம் தற்போது

ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமூகவளைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக அம்மிணி அடிக்கடி மாடர்ன் போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் . இதையடுத்து அந்த படத்தில் நபர் யாரென தெரியாமல் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வரும்

நிலையில் தற்போது அவர் யார் எனும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் வேறு யாருமில்லை இவானாவின் ட்வின் பிரதர் எனவும் அவர் இவானவுடன் ஒட்டிபிறந்த இரட்டையரான லியோ எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..