தமிழ் திரையுலகில் இன்றைக்கு படங்களில் புதுமுகங்களாக பல நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்கள;தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு சினிமாவிலும் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகர்கள் என்னதான் தற்போது படங்களில் நடிக்கவில்லை

எனினும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் தங்களது நடிப்பின் மூலமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 70-களின் காலகட்டத்தில் இருந்து எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் காமெடி, செண்டிமெண்ட், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் மறைந்த பிரபல முன்னணி

நடிகர் குமரிமுத்து. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு பலநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தனது பிரமாண்ட சிரிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து இருந்தார் . இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி எலிசபெத்

எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் அவரது சமீபத்திய புகைபடங்கள் மற்றும்  குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருகிறது. மேலும் அவரது மகள் சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் அவரது சிரிப்பை பார்த்த பலரும் அப்படியே அவரது அப்பாவை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்………….