தற்போது தென்னிந்திய சினிமாவில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கும் படம் என்றால் அது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படம் தான். இந்த படம் இன்னும் திரையில் வெளியாகத நிலையிலேயே வேற லெவலில் பிரபலத்தை பெற்றுள்ளது மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது படக்குழு முழுவதும் காஷ்மீரில் படபிடிப்பு வேலைகளில் பிசியாக இருக்கும் நிலையிலும் தொடர்ந்து பல அப்டேட்களை

கொடுத்து ரசிகர்களை வியப்பின் உச்சத்துக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் என பல முன்னணி பிரபலங்கள் பலரும் நடிக்கும் நிலையில் இந்த படத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 மூலமாக பிரபலமான ஜனனி நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இதையடுத்து இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது கொஞ்சலான தமிழ் பேச்சு மற்றும் வசீகர அழகால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென

தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இதையடுத்து இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வருவார் என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில் சில வாரங்களிலேயே குறைவான வாக்குக்கள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இருப்பினும் வெளியே வந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது அதன் காரணமாக முதலில் செல்போன் கம்பெனி விளம்பரம் ஒன்றில் நடித்த இவர் அடுத்ததாக ஜாக்பாட் வாய்ப்பாக தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு

கிடைத்தது . இதனைதொடர்ந்து அவர் அந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜனனியிடம் நீங்கள் லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கீறிஙகளா என கேட்டதற்கு அதெல்லாம் கம்பெனி சீக்ரெட் கூறிய நிலையில் அட உண்மையை நீங்களே உங்க வாயல சொல்லிட்டிங்களே என கூறியதற்கு வெட்கத்தில் சிரித்துள்ளார் ஜனனி. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……….

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Janany army (@devilrider190)