சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி . சாதாரண சமையல் போட்டியாக இருந்தும் இது மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலமானதுக்கு காரணம் இதில் சிறப்பம்சமாக இருக்கும் கோமாளிகள் தான். ஆம் இந்த நிகழ்ச்சியில் பலரும் கோமாளிகளாக கலந்து கொண்டு தங்களது நகைச்சுவையான பேச்சாலும் நடிப்பாலும் பலரையும் சிரிக்க வைத்து வருவதோடு

தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முன்னணி கோமாளிகளில் ஒருவராக வருபவர் விஜே மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தற்போது சீசன் வரை பல கெட்டப்புகளில் வந்து பலரையும் வியக்க வைத்த நிலையில் கடந்த வாரம் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் இனி வரமாட்டேன் இதுவே குக் வித்

கோமாளியில் கடைசி எபிசொட் எனவும் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கும் விஜய் டிவி டீமுக்கும் பிரச்சனை எனவும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் தற்போது மணிமேகலை

இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தனது கணவர் ஹூசைன் உடன் சேர்ந்து கிராமத்தில் ஏற்கனவே பெரிய பரப்பிலான காலி இடம் ஒன்றை வாங்கி இருந்த நிலையில் தற்போது அதை புல்டோசார் கொண்டு சுத்தம் செய்து வருகிறார். இதையடுத்து அந்த இடத்தில் புதியதாக தொழில் தொடங்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ……….

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)