தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வீரம். ஐந்து அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோரட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் தமன்னா , சந்தானம், லிவின்ஷ்டன் , விதார்த் உள்பட

பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகரும் இயக்குனர் சிவாவின் தம்பியுமான பாலா . இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில்

நடித்து வரும் நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் இவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்டபோது, பாலாவிற்கு கடந்த சில மாதங்களாக கல்லீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கான

மற்று சிகிச்சை அவருக்கு நடந்துள்ளது இப்படி இருக்கையில் மருத்துவமனையில் ஆபரேசன் முடிந்து இருக்கும் தம்பியை பார்க்க இயக்குனர் சிறுத்தை சிவா சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்……..